For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் டாஸ்மாக் கடை சூறை.. துண்டுப் பிரசுரமும் விநியோகம்.. 9 பேர்கைது

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடையை சூறையாடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த கடைக்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல் மது விற்பனைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

9 members group arrested by police in Coimbatore

மேலும் துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விநியோகம் செய்தனர். அதில், "குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும். கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31" என்றும், "குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே, தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே, மூடு கடையை. எவன் வருவான் பார்ப்போம். நம் ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது" என தலைப்பிட்டு மது விற்பனைக்கு எதிராக 4 பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து விற்பனையாளர் காசிநாதனை எச்சரித்து கடையை விட்டு வெளியேற்றிய அவர்கள், கடையை சூறையாடினர். கடையில் இருந்த சுமார் 1000 மதுபாட்டில்களை கடைக்கு வெளியே எரிந்த அவர்கள், மதுபாட்டில்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புரட்சிகர இளைஞர் படை என்று கூறிக்கொண்ட அந்த 9 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் ஆயிரம் மதுபாட்டில்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Coimbatore TASMAC shop looted by the 9 people group. police filed case and arrest the protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X