11 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
சென்னை: சென்னையில் நடந்த 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த 11 பேரில் 9 பேரின் அடையாளம் தெரிந்து விட்டது.
இவர்களில் 5 பேரின் உடல்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை. மற்ற நால்வரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

காயமடைந்த 19 பேர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அங்கு 150 படுக்கைகள் கொண்ட 2 அவசர வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அடங்கிய குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்கப்பட்டு கொண்டு வரப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்குத் தகவல் அளிப்பதற்காக போரூர் மருத்துவமனையில் மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications