''கருணாநிதி ராவோடு ராவாக அனல் மின் நிலையத்துக்குள்ள போய் கேபிளை வெட்டிட்டாரா?'
சென்னை: ஜெயலலிதா பிரதமர் ஆக 99 சதவீதம் வாய்ப்பே இல்லை. அப்படியே ஆனால் எதிர்கட்சி மாப்பிள்ளைங்க எல்லோரும் வாலை சுருட்டிக்கணும் என்று திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.
பட்டிமன்றங்களில் நடுவராக கலக்கி வரும் திண்டுக்கல் ஐ. லியோனி ஜெயலலிதா பிரதமர் ஆனால் என்னவாகும் என்று முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,

ஜெயலலிதா
ஜெயலலிதா ஏன் பாஜகவை விமர்சிக்கவே இல்லை என்று நாங்கள் பிரச்சார மேடைதோறும் கேட்டோம். இப்போ அந்தம்மா பாஜகவை தாக்கிப் பேசியிருப்பது சும்மா வெறும் கண்துடைப்பு நாடகம்.

ஜெ. பிரதமரானால்
ஜெயலலிதா பிரதமர் ஆக 99 சதவீதம் வாய்ப்பே இல்லை. ஒரு வேளை அந்தம்மா பிரதமர் ஆனா நாடு முழுவதும் ஒத்த ரூபாய்க்கு இட்லி, 2 ரூபாய்க்கு புளிசாதம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கிவிட்டு அவங்க சுரண்ட ஆரம்பிப்பாங்க. பாஜகவை விட மோசமான மதவாத குணம் அந்த அம்மாவுக்கு. அதனால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

எதிர்கட்சி மாப்பிள்ளைங்க
நாடாளுமன்றத்தை எதிர்கட்சிக்காரங்க தான் நடத்துறாங்க. அம்மா பிரதமராகிட்டா எதிர்கட்சி மாப்பிள்ளைங்க எல்லாம் வாலை சுருட்டிக்கணும் இல்லைன்னா அவங்க எல்லாத்தையும் வெளியே தூக்கி வீசிடுவாங்க.

ராணுவ அமைச்சர்
அம்மா டெல்லியில் இருந்தால் வருஷத்தில் 7 வாட்டி ராணுவ அமைச்சரை மாத்துவாங்க. அப்புறம் பக்கத்து நாட்டு பங்காளிங்க சுலபமா இந்தியா மீது படையெடுப்பாங்க.

மின்வெட்டு சதி
மின்வெட்டு ஏற்பட சதி என்று ஒரு முதல்வர் சொல்லலாமா? திமுக சதி என்றால் கருணாநிதி ராவோடு ராவாக எண்ணூர் அனல்மின் நிலையத்துக்குள்ள போய் கேபிள்களை வெட்டிட்டாரா?

ரஜினி
ரஜினி என் நண்பர் என்று கூறுகிறாரே மோடி இதுக்கு முன்னாடி 2 வாட்டி சென்னை வந்தப்ப ரஜினி நண்பர் கண்ணுக்குத் தெரியலையோ? நண்பர் என்றால் ரஜினியோடு படித்தாரா, பம்பரம் சுத்தினாரா? இவங்க ரஜினியை ஊறுகாய் போன்று நினைக்கிறாங்க. ஆனால் அவரோ எல்லாருக்கும் கிலோ கணக்கில் அல்வா கிண்டி கொடுத்துடுவாருல.

விஜயகாந்த்
மோடி கூட ஏன் கை கோர்த்தீங்கன்னு கூட்டித்தில் இருந்த ஒருவர் விஜயகாந்திடம் கேட்க அவரோ ஏய் நான் சொல்றத கேளு ஓட்டு போடச் சொன்னா போடுங்கறாரு. கூட்டம் ஒன்றில் முன் வரிசையில் இருந்த ஒருத்தன் தலைவா எந்த கடையில் சரக்கு வாங்கி அடிச்ச என்று கேட்டுட்டான். உடனே அவர் ஏய் அதெல்லாம் கேட்காதன்னு குதிச்சாரு. அந்த நேரம் பார்த்து கேப்டன் டிவியில் சிக்னல் போச்சு. அவர் ஒரு நல்ல நடிகர். நான் கூட அவரோட ரசிகன். ஆனால் அரசியலில் அவர் படும்பாட்டை பார்த்தால் பாவமாக இருக்கு.

ஒபாமா
ஒபாமா கூட இப்படி பறக்கமாட்டார். உலகத்திலேயே பத்து கிலோமீட்டருக்கு கூட ஹெலிகாப்டர்ல போறது இந்த அம்மா மட்டும் தான் என்றார் லியோனி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications