இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 99 பேர் விடுதலை
சென்னை: இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அப்போது மீனவர்களின் படகுகளும், மீன் பிடி சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 99 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 94 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அவ்வப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் நடந்த இந்தியா - இலங்கைக் கூட்டுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட பொருளாதாரம், வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மீனவர்கள் விடுதலை குறித்து மட்டுமே இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications