99 வயது தாத்தா செய்யும் காரியமா இது.. நினைத்தாலே வயிறு எரிகிறது!
10 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 99 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: நாளுக்கு நாள் வன்மமும், காமமும் தலைதூக்கி தாண்டவமாடி கொண்டிருக்கிறது என்பது தற்போதைய நிகழ்வுகள் காலக்கண்ணாடியாய் பிரதிபலித்து கொண்டிருக்கிறது. வயதுக்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவு பெரியவர்களுக்கு கொஞ்சமும் வேண்டாமா?
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியின் அருகே உள்ள பகுதி சென்னீர்குப்பம். இங்கு வசிப்பவர் பரசுராம். இவர் தனது வீட்டில் குடியிருந்த 5-ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவருக்கு வயதோ 99.

அதிக அளவு பாலியல் தொல்லைக்கு ஆளானதால், அழுதவாறே சிறுமி பெற்றோரிடம் முறையிட, பெற்றோரோ, ஆவடி மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசாரோ அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து பரசுராமரை போக்சா சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இதையடுத்து தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
99 வயதில் இவ்வளவு கீழ்த்தரமான புத்தியும், வக்கிரமும் கொண்ட இந்த முதியவர் செயலினால் காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் 2 விஷயம் முக்கியமாக சொல்ல வேண்டி உள்ளது. ஒன்று,போக்சா சட்டத்தின்கீழ் இவ்வளவு வயதானவர் கைது செய்யப்படுவதுதே இதுவே முதல் முறையாம். இரண்டாவது, இந்த 99 வயது முதியவர் ஓய்வு பெற்ற ஒரு தலைமை ஆசிரியராம். எங்கேதான் போய் முட்டிக்கொள்வது?
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications