சென்னையில் பயங்கரம்: 7 மாதமாக 17 பேரால் சீரழிக்கப்பட்ட 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி!
Recommended Video

சென்னை: அயனாவரத்தில் வாய் பேசமுடியாத காது கேளாத 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதத்தில் 17 பேர் பலாத்காரம் செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என யாரையும் விட்டு வைப்பதில்லை இந்த காமவெறியர்கள்.
இந்நிலையில் சென்னையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 17 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் குலை நடுங்கச் செய்துள்ளது.

புகாரால் அதிர்ச்சி
சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் இன்று ஒருபெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாய் பேசமுடியாத காதுகேளாத சிறுமி
அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக்கூறப்படுகிறது.

வாய் பேசமுடியாத காதுகேளாத சிறுமி
அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக்கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது.

17 பேர் மாறி மாறி..
இந்த விவகாரம் அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், வாயிற்காவலர் என மற்றவர்களுக்கும் தெரியவர அவர்களும் சிறுமியை பங்குபோட்டுள்ளனர். மொத்தம் 17 பேர் சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பரிசோதனை செய்த தாய்
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்தக் கொடுமை அச்சிறுமிக்கு நடந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை நாளுக்குள் நாள் மோசமடைந்து வந்ததால், உடல்நிலை சரியில்லையோ என தாயார் பரிசோதித்து பார்த்துள்ளார்.

சொல்ல தெரியாத சிறுமி
அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை அறிந்து தாயார் அதிர்ச்சி அடைந்தார். தன்னை யார் பாலியல் வன்கொடுமை செய்தது ? என்பதை சரியாக கூற முடியாத நிலையில் சிறுமி இருந்துள்ளார்.

17 பேர் மீது புகார்
இருப்பினும் சிறுமியின் பேச்சை உணர்ந்து கொள்ளும் அவரது தாயார், அனைத்து உண்மைகளையும் கேட்டு அறிந்துள்ளார். சிறுமி அளித்த தகவலின் பேரில், 17 பேர் மீது அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

3 பேரிடம் விசாரணை
இதையடுத்து உடனே அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய நிலையில் காவலாளிகள், பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர் என 18 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications