Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மாவுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆன்ட்டி.. 15 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற 17 வயது மகன்!

சென்னையில் தாயுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு பெண்ணை 17 வயது மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    15 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற 17 வயது மகன்!-வீடியோ

    சென்னை: ஓட்டேரியில் தாயுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு பெண்ணை 17 வயது மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை ஓட்டேரியில் சுப்ராயன் 4 வது தெருவை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் கோவிந்தராஜன்.

    இவர்களுக்கு 11 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளான். கணவர் இறந்த நிலையில் பரிமளா தனது மகனை மயிலாப்பூரில் உள்ள விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்து வந்தார்.

    பரிமளா வீட்டின் மேல்

    பரிமளா வீட்டின் மேல்

    மேலும் அவர் ஓட்டேரியில் தனியாக வாடகைக்கு வீடெடுத்து தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் பரிமளா வசித்து வந்த வீட்டின் மேல் தளத்தில் பாக்கியம் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    பாக்கியத்தை திட்டிய பரிமளா

    பாக்கியத்தை திட்டிய பரிமளா

    இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பரிமளாவுக்கும் பாக்கியத்திற்கும் தகராறு முற்றியது. இதனால் பாக்கியத்தை பரிமளா திட்டியுள்ளார்.

    15 இடங்களில் கத்திக்குத்து

    15 இடங்களில் கத்திக்குத்து

    இதனால் ஆத்திரமடைந்த பாக்கியத்தின் 17 வயது மகன் சூர்யா, பரிமளாவை 15 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் அலறி துடித்த பரிமளா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    பரிமளா பரிதாப பலி

    பரிமளா பரிதாப பலி

    சத்தம் கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினர் பரிமளாவை சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார்.

    17 வயது சிறுவன்

    17 வயது சிறுவன்

    இதுகுறித்து தலைமை செயலகம் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியவர்களுக்குள் நடைபெற்ற சண்டையில் 17 வயது சிறுவன் கையில் கத்தியெடுத்து கொலை வரை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+