13 வயது சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்.. 65 வயது முதியவரை அடித்து உதைத்த மக்கள்.. அள்ளிச்சென்ற போலீஸ்!

திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    13 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை-வீடியோ

    திண்டுக்கல்: 13 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளியான 7 ஆம் வகுப்பு மாணவியை 7 மாதங்களாக குடியிருப்பில் பணிபுரிந்த ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமி ஒருவருக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    கூலித்தொழிலாளி

    கூலித்தொழிலாளி

    திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ளது எரும நாயக்கன்பட்டி இங்கு வசித்து வருபவர் மணி. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    65 வயது முதியவர்

    65 வயது முதியவர்

    இவரது 13 வயது மகள் திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே முருகன் என்ற 65 வயது முதியவர் வசித்து வருகிறார்.

    தர்மஅடி கொடுத்த மக்கள்

    தர்மஅடி கொடுத்த மக்கள்

    இந்நிலையில் மாணவியை முதியவர் முருகன் நேற்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை பார்த்த கிராம மக்கள் முதியவர் முருகனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    பின்னர் இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+