8 வயதில் பென்ஸ் கார் மீது காதல்கொண்ட விவசாயி.. 88 வயதில் காதலை வசமாக்கி சாதனை!
88 வயதில் பென்ஸ்கார் வாங்கி சிறுவயது கனவை நனவாக்கிய விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Recommended Video

காஞ்சிபுரம்: 88 வயதில் பென்ஸ்கார் வாங்கி சிறுவயது கனவை நனவாக்கிய விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தேவராஜன். 88 வயது முதியவரான இவர் விவசாயி ஆவார்.
இவர் 8 வயதாக இருந்த போது சாலையில் சென்ற பென்ஸ் கார் ஒன்றினை பார்த்து ஆசைப்பட்டுள்ளார். சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது என்ன கார் என்று தெரியாமலே அந்தக் காரை வாங்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார் தேவராஜன்.

80 ஆண்டுகள் கடந்தன
அந்தக் காரின் முகப்பில் இருந்த லோகோ டிசைன் மட்டுமே இவருக்கு நினைவில் இருந்துள்ளது. அந்த லோகோ டிசைனை மட்டுமே மனதில் வைத்து 80 ஆண்டுகளை கடந்த தேவராஜன் தனது 88வது வயதினில் கனவை நனவாக்கி சாதித்துள்ளார்.

பி கிளாஸ் பென்ஸ்
ஆம் அண்மையில் 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கினார் தேவராஜன். சென்னையிலுள்ள பென்ஸ் ஷோரூமில் புதிதாக வெள்ளை நிறத்திலான பி-கிளாஸ் பென்ஸ் கார் ஒன்றினை வாங்கியுள்ளார்.

88 வயதில் வசப்பட்ட காதல்
8 வயதில் பென்ஸ் கார் மீது காதல் கொண்ட தேவராஜன் இந்த தள்ளாத 88 வயதில் அதனை கரம்பிடித்து வியக்க வைத்துள்ளார். தேவராஜனின் கனவு 80 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேறப்போவதை அறிந்த பென்ஸ் ஷோரூம் நிர்வாகத்தினர் அவர் ஷோரூமில் நுழைவது முதல் காரை டெலிவரி எடுப்பது வரை வீடியோவாக எடுத்து அவரின் கனவுக்கு மரியாதை கொடுத்துள்ளனர்.

கொண்டாடிய பென்ஸ் நிறுவனம்
டெலிவரி எடுக்கும் முன்னதாக கேக் ஒன்றையும் அவர் மூலமாக வெட்டச்செய்து அவரின் வாழ்நாள் சாதனையை கொண்டாடியுள்ளனர் பென்ஸ் கார் நிறுவனத்தினர். தனது மனைவியுடன் பென்ஸ் காரை வாங்கி குதூகலித்துள்ளார் தேவராஜன்.

மனைவியின் 100% ஒத்துழைப்பு
80 ஆண்டுகளாக தனது கடின உழைப்பின் மூலம் சிறுக சிறுக சேமித்து தனது கனவை நிறைவேற்றியிருக்கிறார். தனது கனவு நனவாகியதில் தன் மனைவி 100% ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறிய தேவராஜன் தனது லட்சியம் நிறைவேறிவிட்டதாக புன்னகைத்தபடியே பென்ஸ்காரில் புறப்பட்டார்.

குவியும் பாராட்டு
ஆசையை நிறைவேற்ற வயது ஒரு தடையில்லை என நிரூபித்துள்ள விவசாயி தேவராஜனுக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications