'மன்னார்குடி' பஸ்ஸிலிருந்து இறங்கி ஓபிஎஸ் வீட்டுக்குள் ஓடிய எம்.எல்.ஏ.. கிரீன்வேஸ் கலாட்டா!
சசிகலா தரப்பால் பேருந்தில் சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் கிரீன்வேஸ் சாலைக்கு சென்றபோது நைசாக ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை: சசிகலா தரப்பால் பேருந்தில் சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் கிரீன்வேஸ் சாலைக்கு சென்றபோது நைசாக ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த சென்றபோது எம்எல்ஏ சண்முகநாதன் யாருக்கும் தெரியாமல் ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவுவதைத் தடுப்பதற்காக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன் அவர்களை அப்படியே சொகுசு பேருந்தில் சிறைவைத்தது சசிகலா தரப்பு. அவர்களை மன்னார்குடி கும்பலுக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைப்பது என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த மன்னார்குடி கோஷ்டி அவர்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு ஒரு எம்எல்ஏக்கு 4 பேர் என அடியாட்களையும் நியமித்திருந்தனர்.

மெரினாவிலேயே சுற்றிய பேருந்து
எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து 3 மணி நேரமாக மெரினா கடற்கரையிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு சென்றது.
கிரீன்வேஸ் சாலைக்கு சென்ற பஸ்
கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸின் வீடும் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி வீட்டிற்குள் செல்வதற்காக பேருந்து நின்றது. அதிலிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் உள்ளே சென்றனர்.
ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த எம்எல்ஏ
அப்போது எம்எல்ஏ சண்முகநாதன் அங்கிருந்தவர்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு யாருக்கும் தெரியாமல் ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் ஓபிஎஸை சந்தித்த அவர் தனது ஆதரவை தெரிவித்தார்.
நொந்த மன்னார்குடி கோஷ்டி
மதியம் முதல் பாதுகாப்பாக பஸ்க்குள்ளேயே வைத்திருந்து கடைசியில் ஓபிஎஸ் வீட்லேயே கொண்டுச் சென்று விட்டுவிட்டோமே என மன்னார்குடி கோஷ்டி நொந்து போயுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications