Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கல்பட்டு அருகே பரபரப்பு.. காய்கறி வண்டியில் மூட்டையோடு மூட்டையாக கடத்தப்பட்ட முதியவர் பிணம்!

செங்கல்பட்டு அருகே பரபரப்பு.. காய்கறி வண்டியில் மூட்டையோடு மூட்டையாக கடத்தப்பட்ட முதியவர் பிணம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காய்கறி வண்டியில் மூட்டையோடு மூட்டையாக கடத்தப்பட்ட பிணம்!- வீடியோ

    செங்கல்பட்டு: காய்கறி வண்டியில் மூட்டையோடு மூட்டையாக முதியவர் ஒருவரின் பிணம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு அருகே சென்ற காய்கறி வண்டியில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே இறந்தவர் ஒருவரின் சடலம் மூட்டையாக கட்டப்பட்டிருந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த வண்டியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த வண்டியை ஆய்வு செய்த பொதுமக்கள் காய்கறிகளுடன் மறைந்து கடத்தப்பட்ட சடலத்தை கைப்பற்றினர்.

    காய்கறி வண்டியில் சடலம்

    காய்கறி வண்டியில் சடலம்

    கடத்தப்பட்ட ஆணின் சடலத்தை கைப்பற்றிய கையோடு பொதுமக்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் காய்கறி வண்டியில் உயிருடன் இருந்த 2 முதியவர்களையும் பொதுமக்கள் மீட்டனர்.

    உயிரிழந்தவர் யார்?

    உயிரிழந்தவர் யார்?

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றியதோடு, முதியவர்கள் இருவரையும் மீட்டு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் உயிரிழந்தவர் யார்? எப்படி உயிரிழந்தார்?

    சடலத்தை கடத்தியது ஏன்?

    சடலத்தை கடத்தியது ஏன்?

    எதற்காக காய்கறி வண்டியில் சடலத்தை கடத்துகிறார்கள் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த காய்கறி வண்டி ஏதாவது ஹோட்டலுக்கு செல்கிறதா? இறந்தவர்களின் சடலம் எதற்காக கடத்தப்படுகிறது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    காய்கறி மூட்டையுடன் முதியவர் பிணம் மூட்டையாக கட்டப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுதான் ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு செங்கல்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தால் இன்றும் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு தொற்றியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+