தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் மிகப்பெரிய நெட்வொர்க்.. சூரப்பா பரபரப்பு தகவல்
Recommended Video

சென்னை: தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகாரில் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் நிருபர்களை இன்று சந்தித்தார் சூரப்பா. அவர் கூறியதாவது: தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் பெரிய நெட்வொர்க் இருப்பதாக சந்தேகிக்கிறேன். இவர்கள் பல காலமாக இதை செய்து வந்துள்ளனர். இதுபற்றி விரிவான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் முறைகேடு நடக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் தொடர்புள்ள, கல்லூரிகளில் நடந்துள்ளன. அண்ணா பல்கலை. ஊழியர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை. இதில் எத்தனை பேராசிரியர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.
இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஊழல்கள் நடந்து வருகிறது. ஊழலுக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்வது இந்திய மனங்களில் ஊறிவிட்டது. எனவேதான், நான் தொடர்ச்சியாக, ஊழலற்ற கடமையை செய்யுமாறு ஆலோசனை கூட்டங்களில் அறிவுறுத்தி வருகிறேன். நான் எப்படி தடுக்க முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
மதிப்பெண் மறுமதிப்பீடு விவகாரத்தில் எவ்வளவு பணம் புழங்கியது என்பதை லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக கூற முடியும். எனக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை வெளிப்படுத்த முடியாது. சேதம் ஆகிவிட்டது. சேதத்தின் மதிப்பைத்தான் இப்போது ஆய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications