பாகுபலியை பாராட்டிய வைரமுத்து... நெகிழ்ந்த ராஜமெளலி!!
சென்னை: இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் பொறிக்கப்படும் என்று பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுக்கடிதம் எழுதியுள்ளார். இதனை தனது டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ள ராஜமௌலி, ஒரு அருமையான ஆசிரியரிடம் இருந்து ஒரு மாணவனுக்குக் கிடைத்த வாழ்த்து இது என்று கூறியுள்ளார்.
பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ள இந்த படம் பற்றிதான் கடந்த ஒருமாதகாலமாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என அனைவரும் இந்த படத்தினையும், நடிகர்களையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

வைரமுத்து வாழ்த்து
பாகுபலி படம் குறித்து இயக்குநர் ராஜமௌலிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இது செல்லுலாய்டில் எழுதப்பட்ட இன்னொரு இதிகாசமா என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

கவிஞனைக் கண்டேன்
பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப் பெண், பட்டாம்பூச்சிகள் பறந்து போவதைப் போல கலைந்து போனாள் என்று காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது உங்களுக்குள் ஒரு கவிஞனைக் கண்டேன்.

கம்பனின் கற்பனை
கட்டப்பா உறையைத் தொட பாகுபலி வாளை உருவ, வெட்டப்பட்ட முண்டம் தொடர்ந்து ஓடும் காட்சியில் கம்பனின் கற்பனையைக் கண்டேன்.

பெருமைப்படுகிறேன்
போர்க்களக் காட்சியின் நேர்த்தி, இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் நாளை பொறிக்கப்படும். உங்களைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
உலுக்கிய பாராட்டு
|
உலுக்கிய பாராட்டு
அதை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜமெளலி, அதைப் பற்றி குறிப்பிடும்போது...பாகுபலி படத்துக்காக எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், கவிஞர் வைரமுத்துவின் பாராட்டு என்னை உலுக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

அருமையான ஆசிரியர்
இந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என்னிடம் தைரியம் இல்லை. ஒரு லெஜண்டிடம் இருந்து வாழ்த்துகளைப் பெறுவதாகவே எண்ணுகிறேன். ஒரு அருமையான ஆசிரியரிடம் இருந்து ஒரு மாணவனுக்குக் கிடைத்த வாழ்த்து இது என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications