ஓடும் காரில் தீ விபத்து... தப்பி ஓடிய பெண்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ காரில் திடீர் என தீப்பற்றி எரிந்தது. காரில் பயணம் செய்த 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி இன்று ஒரு ஸ்கார்ப்பியோ கார் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 3.30 மணியளவில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
அந்த காரில் 5 பெண்களும் ஒரு குழந்தையும் பயணம் செய்து கொண்டிருந்தனர். கார் தீப்பற்றிய உடன் அதிர்ச்சியடைந்த அனைவரும் காரை விட்டு இறங்கி வெளியே ஓடினர். தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது.












Click it and Unblock the Notifications