கடலூர் அருகே காரும் லாரியும் மோதிய விபத்தில் என்எல்சி இன்ஜினியர் மனைவியுடன் பலி
கடலூர் அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெய்வேலி என்எல்சியில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் கணபதிபாண்டியன். இவர் தனது மனைவி சபிதாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

விருத்தாசலத்தை அடுத்த கோமங்கலம் அருகே கணபதி பாண்டியனின் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணபதி பாண்டியனும் அவரது மனைவி சபீதாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications