மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கோவை கலைமகள் கல்லூரி... மாணவி தூக்கிட்டு தற்கொலை!
கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கலைமகள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தவர் அபர்ணா. இவர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட மாணவிகள் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் விடுதிக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மன்னிப்பு
இதையடுத்து அறையை சோதனை செய்தபோது அங்கிருந்து தற்கொலைக்கான காரணம் உள்ள கடிதத்தை கைப்பற்றினர். அதில் இத்தகைய முடிவை எடுத்ததற்கு தாய், தந்தை , நண்பர்கள் ஆகியோரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நண்பர்கள் மேல் அன்பு
மேலும் தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என்றும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். அனைவரையும் விட்டு பிரிவது கவலையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள மாணவி தனது நண்பர்களுக்கு ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.

விசாரணை
இதைத் தொடர்ந்து போலீஸார் மாணவி தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். இந்த கல்லூரி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி இதே கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது.

கெட்டியாக பிடித்துக் கொண்ட மாணவி
அப்போது தீவிபத்து சம்பவத்தின் போது எப்படி மாடியில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க வேண்டும் என்று கற்றுத் தந்தனர். இந்நிலையில் ஒவ்வொருவராக குதித்தனர். அப்போது லோகேஸ்வரி என்ற மாணவியின் டர்ன் வந்தது. இதையடுத்து அவர் குதிப்பதற்கு ஆயத்தமானபோது பயத்தால் ஸ்லாப்பை கெட்டியாக பிடித்து கொண்டார்.

மாணவி உயிரிழப்பு
அப்போது பயிற்சியாளர் சும்மா குதிங்கம்மா என்று தள்ளிவிட்டார். இதில் மாணவி தாறுமாறாக விழுந்ததில் அவரது தலை முதல் மாடியில் இருந்த ஒரு ஸ்லாபில் அடிவாங்கியது. இதில் மயக்கமடைந்த மாணவி அதே இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications