15 ஆண்டுக்கு முன் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு இப்போ தீபாவளி வாழ்த்து அனுப்பிய ஜிகே மணி!
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு தற்போது பாமக தலைவர் ஜிகே மணி தீபாவளி வாழ்த்து அனுப்பியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்னர் காலமான மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்திக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி ராமமூர்த்தி மகன் ராம சுகந்தன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது:

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் மறைந்த எனது தந்தையாருக்கு, இந்த வருடம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனுப்பிய திரு ஜி.கே.மணி அவர்களுக்கு நன்றி !!

இவ்வாறு ராமசுகந்தன் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் சேலம் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜி.கே. மணியின் 16-ந் தேதி கையெழுத்திட்ட வாழ்த்துக் கடிதத்தையும் ராமசுகந்தன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications