தாமரை, நோட்டாவைவிட குறைந்த கட்டணம்-'பொளேர்' விளம்பரம்'- பாஜக பெயரில் கால் டாக்சி ஆபீசுக்கு மிரட்டல்
ஆர்கே நகர் தோல்வியை விமர்சிக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்ட கால் டாக்சி நிறுவனம் மீது பாஜக கடும் கோபத்தில் இருக்கிறது,
Recommended Video

சென்னை: கவர்ச்சிகரமானது என நினைத்துக் கொண்டு சென்னை கால்டாக்சி நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையாகிவிட்டது. அந்த கால்டாக்சி நிறுவனத்துக்கு பாஜகவினர் பெயரால் மிரட்டல் விடப்பட்டது குறித்து போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,
சென்னையை சேர்ந்த கால் டாக்சி நிறுவனம் ஷட் அப் பண்ணுங்க, திமிரு போன்ற சமூக வலைதளங்களில் அதிகரம் பயன்படுத்தும் வாசகங்களுடன் தொடர்ந்து விளம்பரம் வெளியிட்டு வந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை முன்வைத்தும் வார இதழ் ஒன்றில் அந்த நிறுவனத்தின் விளம்பரம் இடம்பெற்றிருந்தது,

நோட்டாவைவிட குறைவு
அதில், தாமரையைப் போல... நோட்டாவை விட குறைவாக வெளியூர் கட்டணம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆர்,கே. நகர் இடைத் தேர்தலில் நோட்டாவிடம் பாஜக தோற்றதைக் குறிப்பிடும் வகையிலான மீம்ஸ்களின் தாக்கத்தில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது,

போலீசில் புகார்
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கால்டாக்சி நிறுவனத்தினர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் பாஜகவின் பெயரால் தங்களுக்கு மிரட்டல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக பெயரால் மிரட்டல்
இந்த மிரட்டல் ஆடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் தம்மை பாஜகவைச் சேர்ந்தவர் கூறிக் கொள்ளும் நபர் அந்த கட்சியின் பெயராலேயே வசை சொற்களை பயன்படுத்தி மிரட்டல் விடுத்திருக்கிறார்.

கால் டாக்சி நிறுவனம் மறுப்பு
இதனிடையே இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் சிலரும் அந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் 2ஜி, ரஜினிகாந்த், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது போன்ற அனைத்து பிரச்சனைகளை முன்வைத்தும் விளம்பரங்களை வெளியிட்டோம் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது,
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications