For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணிக்கு ரஜினி பொருத்தமானவர் - நேற்று!, தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோர்ப்பு இன்று!

பாஜக மற்றும் ரஜினி தொடர்பான நடிகர் கமல்ஹாசனின் கருத்துகள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா ஜனதா கட்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை திடீரென சந்தித்தார். அவரிடம் அரசியல் கல்வி கற்றே என்றார்.

இதையடுத்து கமல்ஹாசன் இடதுசாரிகள் கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவியது. ஆனால் கமல்ஹாசன் இதனை நிராகரித்தார்.

கேஜ்ரிவால் சந்திப்பு

கேஜ்ரிவால் சந்திப்பு

பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்து கமல்ஹாசனை சந்தித்தார். இதனால் ஆம் ஆத்மியின் தமிழக தலைவராகப் போகிறாரா கமல்ஹாசன்? என கூறப்பட்டது.

ரஜினிதான் பொருத்தமானவர்

ரஜினிதான் பொருத்தமானவர்

தற்போது பத்திரிகைகள், டிவிகளுக்கு தொடர்ந்து கமல்ஹாசன் பேட்டி அளித்து வருகிறார். சிஎன்என்- நியூஸ் 18 டிவி சேனலுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், தாம் ஒரு பகுத்தறிவாளன்; பாஜகவுடனான கூட்டணிக்கு ரஜினிகாந்த் தான் சரியான நபர் என கூறியிருந்தார்.

கம்யூனிஸ்டா?

கம்யூனிஸ்டா?

மேலும் தாம் ஜாதியத்தை எதிர்க்கிறேன்; நான் கம்யூனிஸ்டு இல்லை; ஆனால் கம்யூனிஸ்டு தலைவர்கள் எனது ஹீரோக்கள் எனவும் கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும் பேட்டியளித்திருக்கிறார் கமல்ஹாசன்.

பாஜகவுடன் கை கோர்ப்பு

பாஜகவுடன் கை கோர்ப்பு

அந்த பேட்டியில், அரசியலில் எந்த கட்சியுமே தீண்டத்தகாதது அல்ல... பாஜகவின் அதி தீவிர வலதுசாரி கொள்கை எனக்கு உடன்பாடில்லை. ஆனால் மக்கள் நலனுக்காக குறைந்தபட்சம் செயல் திட்டம் உருவாக்கப்பட்டால் பாஜகவுடன் கைகோர்த்து செயல்படவும் தயார் என தடாலடியாக பல்டி அடித்திருக்கிறார் கமல்ஹாசன்.

சமூக வலைதளங்களில் சர்ச்சை

சமூக வலைதளங்களில் சர்ச்சை

பாஜக கூட்டணிக்கு ரஜினி பொருத்தமானவர் என நேற்று கூறிய கமல்ஹாசன்தான் இன்று குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் பாஜகவுடன் கை கோர்க்கவும் தயார் என தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசனின் இந்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
Netizens slammed Actor Kamal Haasan over his comments on BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X