போதையில் டார்ச்சர் செய்த தந்தை: தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற மகள்.. !
காரைக்குடி அருகே போதையில் தினமும் டார்ச்சர் செய்த தந்தையை மகளே தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சிவகங்கை: காரைக்குடி அருகே போதையில் தினமும் டார்ச்சர் செய்த தந்தையை மகளே தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்தைப்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் பிச்சை. 63 வயதான இவர் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார்.
[ இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் உள்பட 19 பொருட்களின் சுங்கவரி உயர்வு.. மத்திய அரசு அதிரடி! ]
இவரது மகள் கற்பகவள்ளி. 41 வயதான கற்பகவள்ளிக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். மகள் உடனிருக்கிறார்.

தந்தை வீட்டில்
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வந்த கற்பகவள்ளி, தந்தை வீட்டிலேயே பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

கிரைண்டர் கல்
இதனால் பிச்சை அடிக்கடி குடித்து விட்டு வந்து, போதையில் மகளிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கற்பகவள்ளி, தந்தை பிச்சை அசந்து தூங்கிக்கொண்டு இருந்தபோது, அவரது தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார்.

போலீஸ்க்கு தகவல்
இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிச்சை பலியானார். இதையடுத்து கற்பகவள்ளி காரைக்குடி தெற்கு போலீசாருக்கு, தனது தந்தையை கொன்று விட்டதாக தகவல் தெரிவித்தார்.

பெரும் அதிர்ச்சி
போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போதையில் டார்ச்சர் செய்ததால் தலையில் கல்லை போட்டு தந்தையை மகள் கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications