வாலிபால் போட்டி: வைகோ விளையாடிய அணி வெற்றி
நெல்லை: பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இறங்கி விளையாடிய கலிங்கப்பட்டி வையாபுரியார் அணி வெற்றி பெற்றது.
கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 ஆவது நாளாக நேற்று நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 10 அணிகளும், லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் 4 அணிகளும் பங்கேற்றன.

இப்போட்டியினை மதிமுக பொதுச்செயலரும், வையாபுரியார் நினைவு கைப்பந்துக் கழகத் தலைவருமான வைகோ தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் ஏர்வாடி எல்.வி. விளையாட்டுக் கழக அணியும், தச்சை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் ஏர்வாடி எல்.வி. அணி வெற்றி பெற்றது.
2 ஆவது சுற்றில் காசியாபுரம் டால்பின் வாலிபால் அணியும், கொங்கந்தான்பாறை லியோ எங்க்ஸ்டர் அணியும் விளையாடின. இதில் டால்பின் வாலிபால் அணி வென்றது.
3 ஆவது சுற்றில் தச்சை நெல்லை அட்டாக் அணியும், என்.ஜி.ஓ. காலனி ஏ ஒன் வாலிபால் அணியும் விளையாடின. இதில் ஏ.ஒன் அணி வெற்றி பெற்றது.
4 ஆவது சுற்று போட்டியில் ஏர்வாடி எல்.வி. கிளப் அணியும், சங்கனாங்குளம் வாலிபால் மாடசாமி கிளப் அணியும் விளையாடின. இதில் வாலிபால் மாடசாமி அணி வெற்றி பெற்றது.
5 ஆவது சுற்றுப் போட்டியில் பாளையங்கோட்டை அன்புநகர் பி.சி.பி. அணியும், கலிங்கப்பட்டி வையாபுரியார் கைப்பந்துக் கழக அணியும் விளையாடின. கலிங்கப்பட்டி அணியில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் களம் இறங்கி விளையாடினார்.
வாலிபால் போட்டியில் பங்கேற்று விளையாடிய வைகோவை பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் 30 க்கு 16 என்ற புள்ளி கணக்கில் வைகோ களம் இறங்கிய கலிங்கப்பட்டி அணி வெற்றி பெற்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications