கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் விழுந்தவர் பலி
கிருஷ்ணகிரி: குடிபோதையில் சாலையோரம் எரிந்து கொண்டிந்த குப்பைக்குள் விழுந்தவர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. அவரது மகன் சுப்ரமணி(34) கிருஷ்ணகிரியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்தார்.
கடந்த 17ம் தேதி இரவு சுப்ரமணி மது குடித்துவிட்டு போதையில் பைக்கில் பெரியமுத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தூரகாபுரி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே அவர் சென்று கொண்டிருக்கையில் நிலைதடுமாறினார். இதையடுத்து அவர் சாலையோரத்தில் எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் விழுந்தார்.
எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் விழுந்த அவரை வெளியே எடுக்க நீண்ட நேரம் ஆனது. அதற்குள் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications