மயிலாடுதுறை விஜயகுமார்.. அம்மன் பாட்டுக்கு அப்படி ஒரு ஆட்டம்.. நடுரோட்டில் அரசு பேருந்துக்கு உதை வேறு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மது போதையில் அம்மன் பாடலுக்கு நடு ரோட்டில் அரசு பேருந்து முன் ஆட்டம் போட்டவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மது போதையில் அவ்வப்போது இதுபோல் குடிமகன்கள் அட்டூழியம் செய்வது தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..
குடிமகன்கள் எல்லை மீறி செல்வது பல இடங்களில் தினசரி வாடிக்கையாகிவிட்டது. டாஸ்மாக் இருக்கிறது என்றால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் கவனமாக செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. மிகவும் அசிங்கமான வார்த்தைகளை பேசிய படி, சாலையில் சண்டை போடுவதும், மதுபோதையில் சாலையில் வாகனங்களை ஓட்டி செல்வதும் வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது. டாஸ்மாக்கை ஒட்டிய பகுதிகளில் குடிமகன்கள் நடுரோட்டில் குடித்துவிட்டு பாட்டிலை தூக்கி போட்டுவிட்டு செல்வதும் சர்வசாதாரணமாகி வருகிறது.

மதுக்கடைகளை ஒட்டி எங்கெல்லாம் காடுகள் இருக்கிறதோ, எங்கெல்லாம் மரத்தின் நிழல்கள் தெரிகிறதோ, அங்கெல்லலாம் மதுபான பாட்டில்களும், மதுபான பிரியர்களும், வாட்டல் பாட்டில், பிளாஸ்டிக் கப்புகள் குவிந்து கிடக்கும். சர்வ சாதாரணமாக பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துவது பல ஊர்களில் இயல்பான ஒன்றாக மாறி வருவதாக மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
காலையில் 12 மணிக்கு முன்பே சட்டவிரோதமாக மதுபானங்களை வாங்கி வந்து குடித்துவிட்டு சச்சரவுகளில் சிலர் ஈடுபடுவதாகவும் புகார்கள் உள்ளது. மதுக்கடைகளில் சில பார்களில் இரவு 10 மணிக்கு மேல் மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது.
இதேபோல் மதியம் 12 மணி வரை எந்த மதுக்கடை பாரிலும் மதுபானங்கள் விற்கப்படுவது இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் மதுபானங்களை கண்ட நேரங்களில் அருந்தும் குடிமகன்களால் பெரும் பிரச்சனைகள் வருவதுடன், குடும்பத்தினரையும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கிறது.
குடிமகன்கள் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு சேட்டைகள் செய்கிறார்கள். அப்படித்தான் மயிலாடுதுறையில் மது போதையில் அம்மன் பாடலுக்கு நடு ரோட்டில் அரசு பேருந்து முன் ஆட்டம் போட்டவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மயிலாடுதுறை கலைஞர் நகர் பகுதியில் கடந்த ஜூன் 7ம் தேதி அன்று கோயில் திருவிழாவிற்காக பக்தி பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது மது போதையில் நடுரோட்டில் அரசு பேருந்தை வழிமறித்து விஜயகுமார் என்பவர் ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோவில் மதுபோதையில் இருந்த விஜயகுமார், பேருந்தின் முன்பக்கம் காலை தூக்கி வைத்தபடி, அம்மன் பாடலுக்கு நடனமாடியதுடன், பேருந்தை போகவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து மயிலாடுதுறை போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications