சென்னை கர்நாடக இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் துபாய் தமிழ் மாணவி!
சென்னையில் நாளை நடைபெறும் கர்நாடக இசை நிகழ்ச்சியில் துபாய் தமிழ் மாணவி ஒருவர் பங்கேற்கவுள்ளார்.
சென்னை: நாளை நடைபெறும் கர்நாடக இசை நிகழ்ச்சியில் துபாய் தமிழ் மாணவி குமாரி எஸ். சௌம்யலட்சுமி பங்கேற்கவுள்ளார்.
சென்னை நந்திகேஸ்வர் தாஸ் வித்யாலயா மற்றும் சிஸ்யாஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் இளம் கர்நாடக இசைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரங்கிசை என்ற முதலாவது இளைஞர் திருவிழா வரும் 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 9 மணி வரை சென்னை குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு சென்னை குயின் மேரிஸ் கல்லூரி இசைத்துறையின் ஓய்வு பெற்ற தலைவர் டாக்டர் எம்.ஏ. பாகீரதி தலைமை வகிக்க இருக்கிறார்.சிறப்பு விருந்தினர்களாக SRDFVV பில்டிங் கமிட்டியின் தலைவர் லயன் ஸ்ரீ சி.ஆர். நரசிம்மன், SRSS சபாவின் தலைவர் ஸ்ரீ கே.எஸ். சௌம்யநாராயணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த விழாவில் துபாயில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுக்களை பெற்ற தமிழ் மாணவி குமாரி எஸ். சௌம்யலட்சுமியின் கர்நாடக இசை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது. அதில் பகால ஜெயபிரகாஷ் வயலினும், கே.பி. அர்ஜுன் சுந்தரம் மிருதங்கமும், திருவாரூர் கே. வெங்கடேஷ் கடமும் வாசிக்க இருக்கின்றனர்.தில்லைஸ்தானம் சகோதரிகளான திருமதி வர்தினி பரணீதரன் மற்றும் செல்வி வர்ஷினி சூரியநாராயணன் ஆகியோரும் கர்நாடக இசை நிகழ்ச்சியினை வழங்குகின்றனர்.

மேலும் இளம் இசைக்கலைஞர்கள் பலர் காலை முதல் மாலை வரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது இசைத் திறமையை வெளிப்படுத்த இருக்கின்றனர்.
இந்த விழாவில் இசைப் பிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விழா குறித்து மிருதங்க வித்வான் தில்லைஸ்தானம் ஆர். சூரியநாராயணனை 94448 13586 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விபரம் பெறலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications