ஒரே மகனின் பிரிவை தாங்க முடியாமல் தாய், பாட்டி தற்கொலை: மருத்துவமனையில் தந்தை
திருப்பூர்: மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்தனர். இதில் 2 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாளையம் செட்டிதோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(45). விவசாய பண்ணை வைத்துள்ளார். அவரது மனைவி செல்வநாயகி(41). அவர்களின் ஒரே மகன் பன்னீர்செல்வம்(19). கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி விபத்தில் சிக்கி பலியானார்.

பெற்ற ஒரே மகன் பலியானதில் இருந்து முருகேசனும், அவரது மனைவியும் சோகத்திலேயே இருந்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. மகன் இறந்த சோகத்தில் இருந்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
நேற்று அதிகாலை வேளையில் பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளனர். அவர்களோடு சேர்ந்து பன்னீர்செல்வத்தின் பாட்டி முத்தம்மாளும்(68) விஷம் அருந்தினார். காலையில் தோட்டத்தில் வேலை பார்க்க வந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் பார்த்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.
தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்வநாயகியும், முத்தம்மாளும் பலியாகினர்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications