ஆந்திரா கட்டிய புல்லூர் தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி தற்கொலை: உடலை தேடும் பணி தீவிரம்
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி சீனு என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீரில் மூழ்கியவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாலாறு தடுப்பணையின் அளவை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கான நீர் வரத்து தடுக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படவும் ஆந்திர அரசின் செயல்பாடு காரணமாக அமைந்துள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர மாநில எல்லையில், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணையின் அளவை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது.
இதன் விளைவாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கான நீர் வரத்து தடுக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
விவசாயிகள் கண்டனம்:
பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டியதை தமிழக அரசு தடுக்கவில்லை என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டும் பள்ளத்தூர் கால்வாய்க்கு நீர் வரவில்லை. தடுப்பணை உயர்த்தினால் பள்ளத்தூருக்கு நீர் வரும் என்றும் தவறான தகவலை ஆந்திர அதிகாரி கூறினார் என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் வாணியம்பாடி வரை நீர் வந்து சேர்ந்து 7 ஏரிகள் நிரம்பியிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழக விவசாயிகளின் எதிர்பை பொருட்படுத்தாத ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 36 கிமீக்குள் 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது.
இந்த நிலையில் புல்லூர் அணைக்கு அடுத்துள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த தமிழக விவசாயி சீனு என்பவர் அந்தத் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சீனுவின் உடலை தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications