கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி.. மச்சானுடன் சென்று கத்தியால் குத்திய கணவர்..!!
காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை கணவரும் மச்சானும் சேர்ந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை கணவரும் மச்சானும் சேர்ந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி. 38 வயதான இவருக்கு ரவுடித்தனம் செய்வதே தொழில். இவர் மேல் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன.
இவருக்கு 22 வயதில் வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதாவின் கணவர் பாலாஜியை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

தனிமையில் வாடிய வனிதா
இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் தனிமையில் வாடிய வனிதாவை இளமையும் சேர்ந்து வாட்டியது.

கம்பெனி கொடுத்த கணபதி
அப்போது வனிதாவின் தனிமைக்கு கம்பெனி கொடுத்தார் டிராவல்ஸ் அதிபரான கணபதி. இவர்களுக்குள் முதலில் நட்பாக ஏற்பட்ட பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

எஸ்கேப்பான ஜோடி
பாலாஜி சிறையில் இருப்பதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இனிமேலும் உள்ளூரில் இருந்தால் ஆபத்து என்று எண்ணி கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு எஸ்கேப்பானது.

எகிறிய ஆத்திரம்
அப்போது தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் பாலாஜி. பாலாஜிக்கு அவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்தது. ஏற்கனவே கோபாக்காரரான பாலாஜி மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போனதை அறித்து ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார்.

இரவு பகலாக தேடுதல் வேட்டை
இதையடுத்து, வனிதாவின் தம்பி அஜீத்துடன் சேர்ந்து தேடுதல் வேட்டையை தொடங்கினார் கணவர் பாலாஜி. பாலாஜியும் அவரது மைத்துனரும் சேர்ந்து வனிதாவையும் அவரது கள்ளக்காதலனையும் இரவு பகலாக தேடினர்.

கத்தியால் சரமாரி குத்து
இந்நிலையில், கள்ளக்காதல் ஜோடி இரும்புலியூரில் தங்கி குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இரும்புலியூரில் தங்கி இருந்த 2 பேரையும் கத்தியால் குத்தினர் பாலாஜியும் அஜித்தும். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அவர்கள் தப்பினர்.

கணவர் தம்பிக்கு வலை
தகவலறிந்து, சேலையூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பாலாஜி, அஜித் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications