பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்த காதலி... விரக்தியில் கபடி வீரர் தற்கொலை
காதலி பல ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்து விரக்தியடைந்த கபடி வீரர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: கோபிச்செட்டி பாளையம் அருகே காதலி பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பார்த்த கபடி வீரர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணத்தையும் அவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவரின் மகன் அப்துல் கரீம். கபடி வீரரான இவருக்கு முடச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் காலித்து வந்த நிலையில் தனது காதலியின் செல்போனை எடுத்து கரிம் பார்த்துள்ளார்.

பல ஆண்களுடன் நெருக்கம்
அதில் தனது காதலி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது காதலியிடம் கரீம் விசாரித்துள்ளார்.

திருமணம் செய்ய மறுப்பு
அப்போது அந்தப் பெண் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. இதனால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்களுடன் தொடர்பில் உள்ள உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கரீம் கூறியுள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்
இதையடுத்து அந்தப் பெண் முடச்சூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் சேர்ந்து கரீமை மிரட்டியுள்ளார். மேலும் பல லட்சம் ரூபாய் கேட்டும் அவர்கள் கரீமுக்கு குடைச்சல் கொடுத்துள்ளனர்.

செல்போனில் வாக்குமூலம்
காதலி தன்னை ஏமாற்றியதால் விரக்தியடைந்த கரீம் நேற்று முன்நாள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கான காரணத்தையும் அவர் செல்போனில் விடியோவாக அவர் பதிவு செய்துள்ளார்.

உயிரை மாய்த்த காதலன்
இதைடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது குடும்பத்தினர் கரீம்மின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications