50 வயசாச்சு.. காட்டுமணி செய்த வேலை இருக்கே.. கொடைக்கானல் அருகே ஒரு அக்கிரமம்
14 வயது சிறுவனிடம் தவறாக நடக்க முயன்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

கொடைக்கானல்: பெயர் காட்டு மணி... வயசு 50.. ஆனா பண்ணியிருக்கிற வேலையோ ரொம்ப ரொம்ப கேவலம்!
கொடைக்கானல் அருகே உள்ள பகுதி செண்பகனூர். இங்கு வசித்து வருபவர்தான் காட்டுமணி. கல்யாணம் ஆகிவிட்டது. கட்டின மனைவியை படாத பாடு படுத்தி எடுத்துவிட்டார் காட்டு மணி.
பல கொடுமைகளை வாழும் நாளெல்லாம் அந்த பெண்ணுக்கு தந்தார். இதனாலேயே மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்தும் விட்டார்.

பன்றிகள் வேட்டை
காட்டு மணி வேலை என்ன தெரியுமா? பன்றிகளை வேட்டையாடுவதுதான். விவசாய நிலங்களில் பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்துவிட்டால், காட்டுமணியை தான் கூப்பிடுவார்கள். இவர் பன்றிகளை விரட்டுவதில் கில்லாடி!

கதவை சாத்தினார்
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் காட்டுமணியின் வீட்டு முன்பு 14 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அவன் பெயர் நாகராஜ். விளையாடி கொண்டிருந்தவனை திடீரென தனது வீட்டுக்குள் கூப்பிட்டு கதவை சாத்தி கொண்டார் காட்டு மணி.

மகனை காணவில்லை
பிறகு சிறுவனிடம் தகாத செயலில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் பையனுக்கோ உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டுவிட்டது. காட்டு மணி வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த மகனை காணவில்லை என்று அவரது தாயார் தேடி வந்துவிட்டார். காட்டு மணியின் வீட்டை தட்டினால் அவர் திறக்கவே இல்லை. இதனால் அக்கம்பக்கத்தில் போய் சொன்னதும், எல்லோரும் வந்தார்கள்.

கும்மியெடுத்தார்கள்
கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். அங்கே காட்டுமணி சிறுவனிடம் ஓரினசேர்க்கையில் துன்புறுத்தப்பட்டதை பார்த்து ஆத்திரமடைந்தார்கள். அடுத்த செகண்டே காட்டு மணிக்கு தர்மஅடிதான். தெருவே சேர்ந்து காட்டு மணியை கும்கும்மென்று கும்மியெடுத்தார்கள். பிறகு போலீசில் புகார் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காட்டு மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவனுக்கு சிகிச்சை
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனை உடனடியாக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காட்டு மணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், போராட்டமே செய்வோம் என்று அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications