பாஜக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்.. அண்ணாமலை பாதயாத்திரையின்போது திருப்பத்தூரில் அதிர்ச்சி!
திருப்பத்தூர்: அண்ணாமலை பாதயாத்திரையை ஒட்டி, அவரை வரவேற்பதற்காக பாஜகவினர் வைத்திருந்த கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில், 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொள்கிறார். திருப்பத்தூருக்கு அண்ணாமலை வருகை தருவதை ஒட்டி, பாஜகவினர், திருப்பத்தூர் நகர் முழுக்க இரும்பு கொடிக் கம்பங்கள் நட்டு, பேனர்களை அமைத்திருந்தனர்.

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்திற்காக பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் திரண்டிருந்த நிலையில், பாஜக கொடி கம்பம் விழுந்தது. சுமார் அடி 50 உயர இரும்புக் கொடிக்கம்பம் சாய்ந்தது. இதில், புதுப்பேட்டையைச் சேர்ந்த கலீல் என்பவர் தலையில் கொடிக் கம்பம் விழுந்ததில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலீலுக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை வருகையை ஒட்டி திருப்பத்தூரில் பாஜகவினர் அனுமதியின்றி ஏராளமான இடங்களில் ராட்சத கொடிக் கம்பங்களை அமைத்ததாகவும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications