தங்கையின் 15 வயது மகளை கற்பழித்த தாய்மாமன்.. 10 ஆண்டு ஜெயில் .. பரபரப்பு தீர்ப்பு!
தங்கையின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் தங்கையின் 15 வயது மகளை பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்தும் மகளிர் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவிட்டு தன் தங்கையின் வீட்டிற்கு சென்றுவிடுவார். கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீதர் தனது மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது 15 வயது மகளை அவர் மிரட்டி கற்பழித்துள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.

மிரட்டி கற்பழிப்பு
இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததார். அவரிடம் பெற்றோர் விசாரித்ததில் ஸ்ரீதர் கற்பழித்ததும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.

வழக்கு விசாரணை
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆண் குழந்தை பிறந்தது
இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி கலைமதி நேற்று தீர்ப்பளித்தார்.

10 ஆண்டுகள் சிறை
அதில், "ஸ்ரீதர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.

தமிழக அரசுக்கு உத்தரவு
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி ரூ.2 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்கவேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications