குடும்ப பிரச்சனையால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த தந்தை
கிருஷ்ணகிரியில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

கிருஷ்ணகிரி: மகன்களுடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த கவுண்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (45). இவருக்கு ரஞ்சிதா(40) என்ற மனைவியும் லெனில்(22), விமல்(20) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சண்முகத்துக்கும் அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுவந்துள்ளன. இதைத் தொடர்ந்து ரஞ்சிதா கணவர் குறித்து மகன்களிடம் புகார் கூறிவந்துள்ளார். இதனால், இரண்டு மகன்களும் தந்தை சண்முகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி மகன்கள் லெனில், விமல் இருவரும் தந்தை சண்முகத்தை தாக்கியுள்ளனர். மகன்கள் தாக்கியதால் மனமுடைந்த சண்முகம் வீட்டைவிட்டு வெளியேறி நேற்று வியாழக்கிழமை இரவு சாலூரில் உள்ள தனது நண்பர் ராஜா விட்டில் தங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து சண்முகத்தைக் காணவில்லை என்பதை அறிந்த ராஜா அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளார். தந்தை சண்முகம் காணவில்லை என்பது குறித்து தகவல் அறிந்த மகன்களும் தேடியுள்ளனர். அப்போது குன்னத்தூர் ரயில் நிலையம் அருகே சண்முகம் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அங்கே சிதைந்து கிடந்த தந்தையின் உடலைக் கண்ட மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். தந்தையின் சிதறிய உடல்களை ஒரு பையில் மூட்டை கட்டி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மகன்களுடன் ஏற்பட்ட தகராறால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக உடல் இருந்த இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications