வெளியூர் சென்ற மனைவி வீடு திரும்பும் முன் கணவன் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட்...! கோடை விடுமுறை ஸ்பெஷல்
கோடை விடுமுறை முடியவுள்ள நிலையில் வெளியூர், அம்மா வீடு என சென்றுள்ள மனைவிமார்கள் வீடு திரும்பவுள்ளனர்.
சென்னை: கோடை விடுமுறை முடியவுள்ள நிலையில் வெளியூர், அம்மா வீடு என சென்றுள்ள மனைவிமார்கள் வீடு திரும்பவுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக கோபப்படுத்தாமல் இருக்க கணவன் மார்கள் செய்ய வேண்டியவைகள் குறித்து வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த தகவல் உங்களுக்காக...
1) வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் சேட் கான்வர்ஷேசன் டெலிட் செய்ய வேண்டும்.
2) கம்ப்யூட்டரில் பிரவுசர் ஹிஸ்டரி க்ளியர் செய்ய வேண்டும்
3) செல்போன் கால் லாக் டெலிட் செய்ய வேண்டும்
4) மனைவிக்கு தெரியாமல் புகை, மது பழக்கம் இருப்பின் வீட்டில் உள்ள சிகரெட் துண்டுகள், ஓப்பனர், பீர் பாட்டில், மூடி எல்லாம் தூக்கி எறிதல் வேண்டும்
5) மனைவி வீட்டில் இல்லாததால் அனைத்து நேரங்களிலும் போனில் கடலை வறுத்த தன் கேர்ள் பிரண்ட்ஸ்களுக்கு மனைவி வரும் நேரத்தை சொல்லி உஷார்படுத்த வேண்டும்.
6) இரண்டு, மூன்று வீட்டு வேலைகளை செய்து அதிகம் சிரமப்பட்டது போல் காட்டி கொள்ள வேண்டும்
7) மனைவி வருவதற்கு முன்பே சென்று பஸ் நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ காத்திருந்து பிக்-அப் செய்ய வேண்டும்
8) மனைவி கொண்டு வரும் லக்கேஜ்களை போர்ட்டர் போல் சுமந்து வீட்டுக்கு கூப்பிட்டு வர வேண்டும்
9) 'நீங்க இல்லாம சார் ரொம்ப தவிச்சி போயிட்டார்' என்று சொல்ல பக்கத்து வீட்டு ஆண்டியிடமோ அல்லது காய்கறி கொண்டு வரும் அம்மாவிடமோ நல்ல பெயரை வாங்கியிருக்க வேண்டும்.
இதுவும் பத்தாது எனில்....
1. ஸிங்கில் பாத்திரங்களை போட்டு வைத்திருந்தால் கழுவி வைக்கனும்.
2. அடுப்படியை துடைத்து வைக்கணும். மாடு கன்னு போட்ட இடம் மாதிரி இருக்கக் கூடாது.
3. வீட்டை கூட்டி மூலையில் பத்து பதினைந்து நாளாக சேர்த்து வைத்த குப்பைகளை அப்புறப்படுத்தனும்.
4. பத்து பதினைந்து நாளாக மடிக்காத போர்வையை மடிக்கனும். பெட்சீட்டை விரித்து பெட்டின் மீது ப்ரஷ்ஷாக விரிக்கணும்.
5. வந்ததும் காபி போட பால் இருக்கான்னு பார்க்கணும்.
5A. பிரிஜ்ஜை செக் பண்ணனும். இரண்டு முணு நாளைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என மனைவி சொல்லிச் சென்ற பதார்த்தங்கள் அப்படியே இருக்கும். அவற்றை காலி பண்ணி கழுவி வைக்கணும்
6. முகத்தை பாவப்பட்ட மாதிரி வைத்துக் கொள்ளணும். சந்தோஷமா இருக்கிறது தெரியப்படாது...
7. வந்து நுழைந்ததும் ஸ்கேனிங் நடக்கும். எதிரி நாட்டு எல்லையில் நுழையும் ஒற்றன் மாதிரி முகபாவத்தை வைத்துக் கொள்ளனும்.
இதுக்கு மேல எக்ஸ்ட்ரா பர்ஃபார்மன்ஸ் உங்களுடையது. அதற்காக ஓவர் ஆக்டிங் கொடுத்த மாட்டிக்கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications