கண்ணீரும், கூப்பிய கரமுமாக கடவுளை வேண்டும் குரங்கு- வைத்தீஸ்வரன் கோயிலில் பரபரப்பு!
வைத்தீஸ்வரன் கோவில்: செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலின் பத்திரகாளியம்மன் சன்னதி முன்பு நான்கு நாட்களாக உணவருந்தாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்துள்ள குரங்கின் வீடியோ வாட்ஸப்பில் வைரலாய் பரவி வருகின்ற காரணத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவிலின் வடக்கு பிரகாரத்தில் பத்ரகாளியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.

அம்மனுக்கு வழிபாடு:
இந் நிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் ஒரு குரங்கு அம்மனை வழிபட்டபடியே அக்கோயிலின் முன்னர் அமர்ந்திருந்தது.

பால், பழம் சமர்ப்பணம்:
இதனை கண்ட பக்தர்கள் குரங்குக்கு பழம், பால் மற்றும் உணவுகள் வைத்தனர். ஆனால் எதையும் உட்கொள்ளாத குரங்கு கருவறை அருகே அமர்ந்து அழுது கொண்டே அம்மனை பார்த்தபடியே உள்ளது.

சாய்ந்து கண்ணீர் மல்கும் குரங்கு:
அருகில் செல்லும் பக்கதர்களை எதுவும் செய்யாமல் சுவற்றில் சாய்ந்த நிலையிலேயே அமர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக குரங்கு உணவருந்தாமல் கருவறை அருகே அமர்ந்து வணங்குவது பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனதை உருக்கும் வீடியோ:
குரங்கினைப் பார்க்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆன்மீக பக்தர்கள் சிலர் இந்தக் காட்சியை வாட்ஸ் அப்பில் அனுப்புவதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications