கணவருடன் தகராறு..மதுரையில் 2 குழந்தைகளை பாலித்தீன் பையால் மூடி கொன்று தூக்கில் தொங்கிய தாய்

மதுரையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சத்யசாய் நகரில் வசித்து வருபவர் ராஜா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

இவருக்கு மைக்கேல் ஜீவா என்ற மனைவியும், ஹரிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் ஹரிகிஷோர் குமார் என்ற மூன்று வயது ஆண் குழந்தையும் இருந்தனர்.

 கணவன் மனைவிக்குள் தகராறு

கணவன் மனைவிக்குள் தகராறு

இந்நிலையில் நேற்றிரவு கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை ராஜா வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார்.

குழந்தைகளை கொன்று தற்கொலை

குழந்தைகளை கொன்று தற்கொலை

ஆனால் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மன உளைச்சலில் இருந்த ஜீவா அவர் வேலைக்கு சென்ற பிறகு இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆசை பட பாணியில்

ஆசை பட பாணியில்

இரண்டு குழந்தைகளும் ஆசை பட பாணியில் பாலித்தீன் பையால் மூகத்தை மூடி கட்டப்பட்டு மூச்சு திணறடித்து கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த ராஜா போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தற்கொலையா? கொலையா?

தற்கொலையா? கொலையா?

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜீவாவே குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு யாரேனும் அவர்களை கொன்றார்களா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+