திருப்பூர் அருகே 2 குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
திருப்பூர் அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருப்பூர்: 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பூமலூரை சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவருக்கு 5 வயதில் அர்ஷத் என்ற மகனும் அர்ஷிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சிவரஞ்சனிக்கு கணவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிவரஞ்சனி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

துடிக்க துடிக்க கொலை
தனக்கு பிறகு தனது குழந்தைகள் தவிக்க கூடாது என்று எண்ணிய சிவரஞ்சனி வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் அமுக்கி இரண்டு குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொன்றுள்ளார்.

தீக்குளித்த தாய்
பின்னர் வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை ஊற்றி தானும் தீ வைத்து கொளுத்திக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் பலத்த காயமடைந்தார் சிவரஞ்சனி.

உயிருக்கு போராடும் தாய்
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிவரஞ்சனியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் சிவரஞ்சனி.

பெரும் சோகம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிவரஞ்சனியின் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர். இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications