இது பார்த்திபனின் ‘பீப்’ பாடல்... ஆனால் இது மக்களுக்காக... யூடியூப்பில் வெளியானது!
சென்னை: வெள்ளம் பாதித்த சென்னை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக நடிகர் பார்த்திபன் பீப் என்ற புதிய பாடலை எழுதி, யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிம்பு மீதும், அனிருத் மீதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவே நடிகர் பார்த்திபன் பீப் என்ற புதிய பாடலை உருவாக்கியுள்ளார். ‘த்துதா மித வகுதா' என அப்பாடல் துவங்குகிறது.
இப்பாடல் தொடர்பாக பார்த்திபன் கூறுகையில்,

சராசரி மனிதனாக...
ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள்.

பீப் பாடல்...
அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘‘பீப்'' பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ''பீபீ'' என்று தொடங்குவது போல எழுதினேன்.

தன்னார்வலர்கள்...
இந்த பாடலில் வெள்ள பாதிப்பின்போது பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களை ஆட வைத்தேன். இதில் சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

துயரப் பருப்பு...
துயரப் பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மக்களிடையே இருக்கும் மனித நேயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கம்.

மீ அன்ட் யூடியூப்...
மீ அன்ட் யூடியூப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேவை தொடங்கி அதில் இந்த பாடலை பதிவேற்றம் செய்துள்ளேன். இது போன்ற பல நல்ல விஷயங்களை அந்த சேனலில் பதிவேற்றம் செய்ய உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பணிகளில்...
மழை, வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்ட போது நடிகர் பார்த்திபன் தானே களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications