பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி.. "கேப்டன்" வீட்டில் விசேஷங்க!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டில் பசு புதிதாக ஒரு கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டில் பசு ஒன்று கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது. அதற்கு அட்சயா என்று பெயர் சூட்டினார்.

சாலிகிராமத்தில் விஜயகாந்தின் வீடு உள்ளது. வீட்டு விலங்குகள் மீது பற்று கொண்டவரான அவர் வீட்டில் நாய், பசு போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் லட்சுமி என்ற பசு நேற்று கன்று குட்டியை ஈன்றது. இதை விஜயகாந்தும், பிரேமலதாவும் மெல்ல வருடி கொடுத்தனர்.
பின்னர் விஜயகாந்த் அந்த கன்றுக்கு அட்சயா என்று பெயர் சூட்டினார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
எங்கள் வீட்டு லட்சுமி (பசு), இன்று பசுங்கன்றை ஈன்றது. அதற்கு அட்சயா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்... pic.twitter.com/NAppcZOKmv
— Vijayakant (@iVijayakant) August 27, 2017


Click it and Unblock the Notifications
