கட்டப்பா + பாகுபலி= கபாலி... இதெப்படி இருக்கு?
சென்னை: கபாலியை ஆரம்பத்தில் சீண்டிப் பார்த்தவர்கள் இப்போது அதை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் பாகுபலியோடு கபாலியை இணைத்து புதிய மீம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாகுபலியை விட பல மடங்கு உயர்ந்தது கபாலி என்று ஏற்கனவே கலைப்புலி தாணு சொல்லி விட்டார்.
அதனை மெய்ப்பிப்பது போல் பல புள்ளி விபரங்களும் கிடைத்தன.

தெறிக்கவிட்ட டிரைலர்...
அதாவது பாகுபலி' படம் டிரைலர் ‘யுடியூப்' பில் வெளியிடப்பட்டது. இதை ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ‘கபாலி' படம் திரைக்கு வருவதற்கு முன்பே இதன் ‘டீசரை' 2 கோடிக்கும் அதிகமானோர் யுடியூப்பில் பார்த்து விட்டனர்.

ரிலீசிலும் சாதனை...
‘பாகுபலி' தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் வெளியானது. படம் திரைக்கு வந்த பிறகுதான் சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் ‘கபாலி' தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல மலாய் மொழியிலும் ரிலீசாகியுள்ளது. தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா விலும் அந்தந்த மொழிகளில் ‘டப்பிங்' செய்யப்பட்டுள்ளது.

அதிக தியேட்டர்கள்...
உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ரெக்ஸ் சினிமாஸ்' திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பொருமையை ‘கபாலி' பெற்றுள்ளது. உலக அளவில் ‘பாகுபலி' 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கபாலி 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மீம்ஸ்...
இப்படியாக பாகுபலியை கபாலி தூக்கி சாப்பிட்டு விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கபாலி வேறு யாருமல்ல, அது பாகுபலியின் உறவு தான் என்ற நிலையில் புதிய மீம்ஸ் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதில், கட்டப்பா + பாகுபலி = கபாலி என்று போட்டுள்ளனர். இதுவரை கட்டப்பாவையும், பாகுபலியையும் தனித் தனியாக பேசிக் கொண்டிருந்த வாய்கள் இனி சில காலம் கபாலி குறித்துப் பேசும் என்பதில் சந்தேகம் இல்லை
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications