பாஜக கூட்டணி யூகிக்கவே முடியாத வெற்றி பெறும் என்கிறார் வைகோ
பாஜக கூட்டணியில் கட்சிகள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். இந்த கூட்டணி யாரும் தமிழகத்தில் யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு வெற்றி பெறும்" என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்றது.
தேமுதிக எம்எல்ஏ ஏ.கே.டி ராஜா தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசும்போது,கூறியதாவது:

தமிழருவி மணியன் முயற்சி
"பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை முறைப்படி அறிவிப்பார். தமிழகத்தில் இந்தக் கூட்டணி அமைவதற்காக தமிழருவி மணியன் ஒரு துறவியைப் போல பாடுபட்டுள்ளார்.

மக்களை மீட்கும் தேர்தல்
1972-ல் இருந்து அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஒரு கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டால் மற்றொரு கட்சியை பிடிக்காவிட்டாலும், வேறு வழியின்றி தேர்வு செய்யும் சூழ்நிலை இருந்து வருகிறது.

மாற்றம் ஏற்படும்
இப்படி ஒரு நிலையிலிருந்து மக்களை மீட்கும் தேர்தல்தான் இது.திமுக, அதிமுகவிலிருந்து விடுபட்டு, மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும்

தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு
விடுதலைப்புலிகளின் கடற்படையை இந்திய அரசுதான் அழித்ததாக யஷ்வந்த் சின்ஹாவே கூறியுள்ளார். எனவே நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும்.

எங்கிருந்தாலும் புலி உருமும்
நான் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. எந்த கூண்டில் இருந்தாலும் புலி உறுமும். மாகாணங்களுக்கு உரிமை, மதச்சார்பின்மை, சமூகநீதி, வாஜ்பாய் முடிவின்படி இலங்கை எதிரான போக்கு போன்றவற்றில் மோடி அரசு சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டணியில் ஒற்றுமை
எனக்கு அதிகார கனவு கிடையாது. மதிமுக நடத்தும் முதல் செயல்வீரர் கூட்டத்துக்கு தலைமை வகிப்பது தேமுதிக. அந்தளவுக்கு ஒற்றுமையுடன் உள்ளோம். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. இந்த கூட்டணி யாரும் தமிழகத்தில் யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு வெற்றி பெறும்" என்றார் வைகோ.

செயல்வீரர்கள் பங்கேற்பு
இக்கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன், பாமக மாவட்டச் செயலாளர் வீரக்குமார், மக்கள் தமிழகம் கட்சி நிறுவனர் புரட்சிக்கவிதாசன், காந்திய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications