பூனை மீசை மூலிகை கஷாயம் தரும் அற்புதம்! ரத்தத்தில் கிரியேட்டினின், யூரியா அளவை குறைப்பது எப்படி?
சென்னை: பூனை மீசை மூலிகை பற்றி தெரியுமா? இன்றைய அவசர உலகத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் முறையற்ற வாழ்வியல் காரணங்களால், சிறுநீரகம் தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு சூப்பர் தீர்வை தருகிறது பூனை மீசை மூலிகை. இயற்கை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த மூலிகை தரக்கூடிய மருத்துவ நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
பல முன்னணி மருத்துவமனைகளில் சிறுநீரகக் கல் மற்றும் செயலிழப்புப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெறுவோரின் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இத்தகைய ஆபத்தான சிறுநீரகக் கோளாறுகளை நம்மை நெருங்க விடாமல் தடுப்பதிலும், வந்த நோயைக் குணப்படுத்துவதிலும் ஒரு அரிய மூலிகை மிக முக்கியப் பங்காற்றுகிறது.

பார்ப்பதற்கு பூனையின் மீசையைப் போன்ற அமைப்பைக் கொண்ட பூக்களைக் கொண்டிருப்பதால், இது பூனைமீசை மூலிகை என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் துளசி இலைகளைப் போல தோற்றமளிப்பதால், இதற்குச் சீரகத் துளசி என்றும், சர்வதேச அளவில் ஜாவா தேயிலை என்றும் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பெயர்கள் உண்டு.
பூனை மீசை மூலிகை சிறப்புகள்
பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்த பூனை மீசை மூலிகை தவிர்க்க முடியாத ஒரு உன்னத மருந்தாகக் கருதப்படுகிறது. ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த அதிசய மூலிகைக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனித உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சு உப்புக்கள் மற்றும் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் கெட்ட நீரை அடியோடு வெளியேற்றுவதில் இது முதலிடம் வகிக்கிறது. ரத்தத்தில் ஆபத்தான அளவில் உயரும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை வெகுவாகக் குறைத்து, ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியைச் செய்கிறது. உடலில் தேங்கும் தேவையற்ற உப்புக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
அதுமட்டுமல்லாமல், சிறுநீரகத்தில் உருவாகும் கடுமையான கற்களைப் படிப்படியாகக் கரைத்து, வலியின்றி வெளியேற்றும் வல்லமை இந்த மூலிகைக்கு உண்டு.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்று வலி மற்றும் அசெளகரியங்கள், கடுமையான காய்ச்சல், பித்தப்பையில் ஏற்படும் கற்கள் போன்ற பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம். ரத்தக் கொதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சினைகளைச் சீராக்க தயாரிக்கப்படும் பல சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பூனை மீசை மூலிகை முதன்மை மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.
கிட்னி பிரச்சனைக்கு சூப்பர் மருந்து
இந்த மூலிகையின் இலைகளுடன் குறிப்பிட்ட அளவில் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவிற்கு 2 வேளை உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட அனைத்து விதமான சிறுநீரக நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாகி, சர்க்கரையின் அளவு கட்டுப்பாடற்றுப் போகும்போது, அதனைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த மூலிகை பெரிதும் கை கொடுக்கிறது.
இந்த மூலிகையின் சாற்றை தினமும் இரண்டு வேளை குடித்து வரும்போது சர்க்கரை நோய் படிப்படியாகக் குறையும். அல்லது ஒரு கைப்பிடி அளவு இலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாகவும் பருகலாம். ஜப்பான், மலேசியா, சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளில் இந்த மூலிகையைக் கொண்டு பிரத்யேகமான டீ தயாரித்து குடிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளதாம்.
பூனை மீசை டீ போடுவது எப்படி
ஆனால், இந்த மூலிகையை வழக்கமான தேயிலையைப் போல தண்ணீரில் போட்டு நேரடியாகக் கொதிக்க வைக்கக் கூடாது. ஒன்றரை டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, பிறகு அடுப்பை முழுமையாக அணைத்துவிட வேண்டும். அதன் பிறகு, 2 ஸ்பூன் இந்த மூலிகைப் பொடியைப் போட்டு பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அதனை வடிகட்டி, தேவைப்பட்டால் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
இந்த மருத்துவ தேநீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைப்பதுடன், சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. எனினும், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில் இதனை மருந்தாக எடுத்துக்கொள்வது நலம் பயக்கும்...!!












Click it and Unblock the Notifications