காதுல ”வாய்ஸு” மொபைல்ல “காசு”- அதிமுகவின் புது “டாப்அப்” டெக்னிக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்ற அளவிற்கு தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க புது புது டெக்னிக்களை கண்டறிந்து வருகின்றனர் கட்சிக்காரர்கள்.

அந்த வகையில் வாய்ஸ் மேல காசு என்ற புது ரூட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிமுக விசுவாசிகளால்.

இதனால் மற்ற கட்சி தொண்டர்கள் வயிற்றில் உலை கொதிக்கின்றது என்பது தனிக்கதை.

போன் பண்ணு காசை அள்ளு:

போன் பண்ணு காசை அள்ளு:

அந்தவகையில் மதுரையில் கைப்பேசியில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைத்து "ஹலோ" என்று சொன்னால் பதிவு செய்யப்பட்ட "அம்மா வாய்ஸ்" கேட்டு முடிந்ததும் வெறும் மூன்றே மணிநேரத்தில் அழைத்த எண்ணுக்கு ரூபாய் 200 க்கு ரீஜார்ஜ் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அம்மா வாய்ஸை மொபைலில் கேளு:

அம்மா வாய்ஸை மொபைலில் கேளு:

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 24 ஆம் தேதி நடக்கிறது. வாக்காளர்களை குஷிப்படுத்த "அம்மா வாய்ஸ்" என்ற பெயரில் அதிமுக திட்டங்களை தெரிந்து கொள்ள "95437 78899" என்ற செல்போன் எண்ணில் அழைக்கலாம் என டிவியில் விளம்பரம் செய்யப்படுகிறது.

டாப்அப் செய்வீர்களா? :

டாப்அப் செய்வீர்களா? :

இந்த எண்ணை செல்போனில் அழைத்தால் இணைப்பு கிடைக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதாவின், "40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வீர்களா...?" என்ற பதிவு செய்யப்பட்டகுரல் ஒலிக்கிறது.

டாப்அப் வர்லயே:

டாப்அப் வர்லயே:

இதன் பின்னர் 3 மணிநேரத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட பிரீபெய்ட் எண்ணுக்கு ரூபாய் 200 டாப்அப் ஆவதாக தகவல் பரவியது. ஆனால் சிலரோ எங்களுக்கு அப்படி வரலையே என்று குறைப்பட்டுக் கொள்ளவும் செய்கின்றனர்.

வதந்தியோ என்னவோ, அம்மா வாய்ஸ்க்கு நல்ல பப்ளிசிட்டிதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+