காஞ்சிபுரம் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை.. பிணத்துடன் உறவினர்கள் மறியல்
காஞ்சிபுரம் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா பில்லாதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். 32 வயதான இவருக்கும் 26 வயதான புனிதாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
புஷ்பராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி வேலைக்கு சென்ற புஷ்பராஜ் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

புதுமாப்பிள்ளை கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் கோளிவாக்கம் ஏரிக்கரையில் புஷ்பராஜ் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர்கள் யாரோ கொலை செய்துள்ளனர்.

உடல் ஒப்படைப்பு
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு புஷ்பராஜின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிணத்துடன் மறியல்
இந்த நிலையில் வெம்பாக்கம்-காஞ்சீபுரம் சாலையில் புஷ்பராஜின் உடலை வைத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

4 பேரிடம் விசாரணை
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் புஷ்பராஜை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications