இவரு மட்டும் ரொம்ப வித்தியாசமா கூவியிருக்காரு பாருங்க மக்களே...!
புதுக்கோட்டை: திமுகவினர்தான் விதம் விதமான வித்தியாசமான பிளக்ஸ் பேனர்கள் வைப்பார்கள், வாசகம் தீட்டுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் வர வர இந்த அதிமுகவினர் எல்லோரும் ஆர்ட் டைரக்டர்களாக மாறி வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
ஜெயலலிதா விடுதலையையொட்டி விதம் விதமாக வாழ்த்து கூறி போஸ்டர் அடிக்கிறார்கள், பேனர் வைக்கிறார்கள்.

எங்கள் குலசாமி (குமாரசாமி) என்று கூறி போஸ்டர் அடித்து அசத்தினார். இந்த நிலையி்ல் புதுக்கோட்டையில் ஒரு வித்தியாசமான பேனர் அனைவரது கண்களையும் பளிச் பளிச் என கவருவதாக அமைந்துள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் எந்த வாசகமும் இல்லை. வெறும் அம்மா என்ற வாசகம் மட்டுமே. அதுவும் கூட ஜெயலிதாவின் கண்களும், அவரது நெற்றியில் வைக்கும் பொட்டும் தான் டிசைன். ரொம்ப வித்தியாசமான டிசைன். அந்த வழியாக போகிறவர்கள் ஒரு செகன்ட் ஸ்டன் ஆகி நின்று அட என்று கூறி விட்டு பாஸ் ஆவது போல உள்ளது இந்த வித்தியாசமான பிரமாண்டமான பேனர்.
இந்த பேனரை வைத்தவர் பாண்டி.. ஸாரி பாஸ்கர். இவர் புதுக்கோட்டை நகர செயலாளராம். 3 மாதங்களுக்கு முன்பே இதை ரெடி செய்ய ஆரம்பித்து விட்டனராம். இப்போது "அம்மா" விடுதலையாகி விட்டதால் செம பொருத்தமாகி விட்டதாம் இந்த பேனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications