திருப்பூரில் போலீஸ் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தொழிலாளர் பலி! காவலர் பணியிடை நீக்கம்!
திருப்பூரில் போலீஸ் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: வீரபாண்டி பகுதியில் போலீசார் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்வத்தால் அதிர்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள் காவல்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வீரபாண்டி பிரிவில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரேஷ் என்ற பின்னலாடை நிறுவன தொழிலாளி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை துரத்திப் பிடிக்க முயன்றனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க வேகமாக வண்டியை ஓட்டிய சுரேஷ் சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி கீழே விழுந்தார்.

உடலை எடுக்க விடாமல்..
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சுரேஷின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிப்பு செலவை ஏற்கவேண்டும்..
வீரபாண்டி பிரிவில் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள், சுரேஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சுரேஷின் குழந்தைகளின் படிப்பு செலவை காவல்துறையே ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்..
உயிரிழந்த சுரேஷின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். சாலையோரம் கிடந்த அவரது உடலை எடுக்கவும் அவரது உறவினர்கள் அனுமதிக்கவில்லை.
போராட்டத்தால் பரபரப்பு
உயிரிழந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
காவலர் பணியிடை நீக்கம்
இதைத்தொடர்ந்து சுரேஷ் உயிரிழக்க காரணமான காவலர் செபஸ்டினை மாவட்ட காவல்துறை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து சுரேஷின் உடலை எடுக்க உறவினர்கள் அனுமதியளித்ததையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications