கள்ளக்காதலை கைவிடாத மாமாவை அடித்துக்கொன்ற தங்கை மகன்.. சென்னை அம்பத்தூரில் பரபரப்பு
கள்ளக்காதலை கைவிடாத தாய் மாமாவை தங்கை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: கள்ளக்காதலை கைவிடாத தாய் மாமாவை தங்கை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. 58 வயதான இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார்.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, இறந்துவிட்டார். இவரது மகள் சுந்தரி திருமணமாகி கணவருடன் ஆவடியில் வசித்து வருகிறார்.

மாமா மூர்த்தி
மூர்த்தியின் தங்கை மகன் பாலாஜி. 34 வயதான இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பாடியில் வசித்து வரும் இவர் தனது மாமா மூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார்.

கள்ளக்காதல்
பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை ஏறியதும் பாலாஜி மூர்த்தியிடம், உனக்கும், ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்களே. இந்த வயதில் உனக்கு தேவைதானா என கேட்டுள்ளார்.

சரமாரி தாக்குதல்
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாலாஜி தனது மாமா மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மூர்த்தி நேற்றிரவு 8 மணியாகியும் எழுந்திரிக்கவேயில்லை என தெரிகிறது.

ஆம்புலன்ஸ்க்கு தகவல்
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூர்த்தியை பரிசோதித்து பார்த்துள்ளனர்.

உயிரிழந்த மூர்த்தி
அப்போது மூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிய அவர்கள், கொரட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications