கட்சியும் ரெடி... கொடியும் ரெடி... மதுரையைக் கலக்கும் "கதிமுக"... அழகிரி ஆதரவாளர்களால் பரபரப்பு
Recommended Video

மதுரை: மதுரையில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளர் என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கடந்த 2014-ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது கருணாநிதியின் சம்மதத்துடன் நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் காரணத்தை ஆராய்ந்த போது தனது ஆதரவாளர்களுக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் கட்சியில் முக்கிய பதவிகள் கொடுக்கப்படாததால் அழகிரி பிரச்சினையை கிளப்பியதாக தகவல்கள் வந்தன.

இடம் தெரியாமல்
அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் ஈடுபட்டும் அது எடுபடவில்லை. அவ்வப்போது திமுக குறித்து அழகிரி பேசி வந்தாலும் சமீபகாலமாக கட்சி குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார் அழகிரி.

பிரச்சினை
இந்நிலையில் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மதுரையிலிருந்து குடும்பத்தினருடன் சென்னை வந்தார். இதையடுத்து கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்தபடி மிக குறைந்த கால கட்டத்திலேயே அழகிரியால் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

பரபரப்பு பேச்சு
நேற்றைய தினம் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த அழகிரி , கருணாநிதியின் உடன்பிறப்புகள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று ஒரு குண்டை போட்டார். இதையடுத்து திமுகவில் அழகிரிக்கு இடமே இல்லை என்று அறிவித்து பேராசிரியர் க.அன்பழகன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தயாநிதி அழகிரியின் படம்
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மதுரையில் அழகிரி குறித்த போஸ்டர்கள் அதகளப்படுகின்றனர். அதில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளரே என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அழகிரி நடந்து வருவது போன்ற படமும் தயாநிதி அழகிரியின் படமும் அதில் இடம்பெற்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பரபரப்பு
கருப்பு, சிகப்பு கொடியில் கலைஞரின் உருவம் பொதித்த கொடியும் அதில் இடம் பெற்றுள்ளது. கட்சியும் கொடியும் ரெடி நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால் மதுரை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலத்தின் விளையாட்டு
மேலும் காரிருள் விலகட்டும், சூரியன் உதிக்கட்டும் என்றும் இது காலத்தின் விளையாட்டு, நீ கழகத்தை நிலைநாட்டு, கடமை உண்டு உனக்கு காத்திருப்போம் அதற்கு... என்று போஸ்டரில் பஞ்ச் டயலாக்குகள் உள்ளன. அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் உள்ளாரா அல்லது அடி விழுதுகள் வழக்கம் போல் ஓவர் பாசத்தை கொட்டி விட்டனரா என்பது போக போகத்தான் தெரியும்.

எழுத்து பிழை
தமிழ் வளர்த்த தானை தமிழரின் மகனை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டும் அடிவிழுதுகள் இப்படி எழுத்துபிழையுடன் ஒட்டியுள்ளனரே என தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். அதாவது பொதுச் செயலாளர் என்பதுதான் சரியானது, ஆனால் இவர்களோ பொதுச் செயலாலர் என்று எழுத்துபிழையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications