தமிழ்நாடு அதிர தட்டுங்களே கையத் தட்டுங்களே.. நெடுவாசல் போராட்டத்தை அதிர வைத்த கர்ப்பிணியின் பாடல்
‘தமிழ்நாடு அதிர்ந்திட தட்டுங்களே கையத் தட்டுங்களே’ என்று நெடுவாசல் போராட்டக் களம் அதிர கர்ப்பிணி பெண் ஒருவர் பாடல் பாடி அங்கிருந்த போராட்டக்கார்களை எழுச்சியூட்டினார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 18 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் மத்திய அரசு ரத்து அறிவிப்பை வெளியிட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மக்கள் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை விவசாயிகள், விவசாய அமைப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் ஆதரித்து வருகின்றனர்.
மேலும், சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் சாரை சாரையாக நெடுவாசலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் மக்கள், தாரை, தப்பட்டை, ஆடல், பாடல் என அமர்களத்தோடு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதிர வைத்த கர்ப்பிணி
இப்படி போராட்டத்திற்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் ‘தட்டுங்களே கையை தட்டுங்களே' என்ற பாடலை தனது கம்பீரக் குரலால் பாடினார். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கும்மி அடித்துக் கொண்டே பாடலை பாடி ஆராவாரம் செய்தனர்.

இதுதான் அந்த பாடல்…
தட்டுங்களே கையத் தட்டுங்களே இது ஹைட்ரோ கார்பனுக்கு நெத்தியடி..
வேணாமுங்க அட வேணாமுங்க இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் வேணாமுங்க
வேணுமுங்க இங்க வேணுமுங்க எங்க விளைநிலங்கள் வேணுமுங்க
பாட்ட பூட்டனெல்லாம் ஆண்ட நிலம்.. நம்ம பசி தீர்த்த விளை நிலம்
அத ஓட்ட போட்டு உறிஞ்சி எடுக்க உடமாட்டோம் தமிழினம்
வாடிவாசல திறந்துவிட்டோம்..
இங்க நெடுவாசல் கோரிக்கையை தீர்த்து வைப்போம்
இளைஞர் முதியோர் எல்லோருமாய் இங்கே இறுதி வரை போராடுவோம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தையே நாங்க அமல் படுத்த விடமாட்டோம்
இந்த மண்ணும் நீரும் மாசுபட மானத்தமிழர் விடமாட்டோம்
கொட்டுங்களே கும்மி கொட்டுங்களே தமிழ் நாடு அதிர்ந்திட கொட்டுங்களே
தட்டுங்களே கைய தட்டுங்களே இது ஹைட்ரோ கார்பனுக்கு நெத்தியடி
ஓங்கி தட்டுங்களே கைய தட்டுங்களே இது ஹைட்ரோ கார்பனுக்கு நெத்தியடி
என்று அந்தப் பெண் பாடப் பாட போராட்டக் களமே கோரசாகப் பாடி போராட்டக் களம் கலைகட்டியது.

பெண்கள் கும்மி
நெடுவாசல் போராட்டத்தில் பெண்கள் அதிகமாக அமர்ந்திருக்கும் பகுதியில் நின்று இந்தப் பெண் பாட்டுப் பாடினார். அவர் பாடப் பாட, பெண்களில் சிறியவர், பெரியவர், முதியவர் என அனைவரும் கும்மி அடித்து எழுச்சியாய் கூடவே பாடி அசத்தினர்.

கலை நிகழ்ச்சிகள்
இதே போன்ற மற்ற கலை வடிவங்களையும் போராட்டக் களத்தில் கலைஞர் எதிர்ப்பு வடிவமாய் நிலை நிறுத்தினர். பலர் பறை அடித்தும், சிலர் பாட்டுப்பாடியும், கும்மியடித்தும் நெடுவாசல் போராட்டத்தை வீரியம் மிக்க ஒன்றாய் செரிவூட்டி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications