சகாயம் முதல்வராக வேண்டும்.. சென்னையில் ஒரு பேரணி!
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் இன்று ஒரு பேரணி நடத்தப்பட்டுள்ளது.
சகாயத்தை முதல்வராக்க 5000 பேர்
கொண்ட பேரணி..
#WeWantSahayamAsCM pic.twitter.com/fYck0TrGrb
— அரபுநாட்டு_தமிழன் (@ManuMechstar) December 20, 2015 இலக்கு என்ற அமைப்பு இந்த பேரணியை நடத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த இலக்கு அமைப்பானது சகாயம் முதல்வராக வேண்டும் என்று கோருவோர் சென்னையில் திரண்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

அதை ஏற்று இன்று பலர் வந்திருந்தனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து இந்த பேரணி தொடங்கியது. வெள்ளை நிற உடையில், சகாயம் தான் எங்கள் முதல்வர் என்ற பதாகைகள ஏந்தியபடி இவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து ஊழல் அழிக்கப்பட, தமிழக மக்களின் உரிமை காக்க, ஊழலற்ற சமுதாயத்தை, ஆட்சியை நிர்மானிக்க சகாயம் முதல்வராக வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர்.

பேரணியெல்லாம்.. சரி.. சகாயத்துக்கு சிக்கல் வந்துடாம இருந்தா சரித்தான்.












Click it and Unblock the Notifications