பிரபல ரவுடி விஜி சென்னை மண்ணடியில் மர்ம நபர்களால் பட்டப்பகலில் வெட்டி கொலை
சென்னையில் பிரபல ரவுடி விஜி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: மண்ணடியில் பிரபல ரவுடி விஜி பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் ரவுடி விஜி ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று மாலை அவர் பவளக்காரத் தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் விரட்டியது. அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற ரவுடி விஜி வீடு ஒன்றில் புகுந்தார்.
அப்போதும் அவரை விடாமல் விரட்டிச்சென்ற அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் ரவுடி விஜி.
பிரபல ரவுடி விஜி சென்னை மண்ணடியில் மர்ம நபர்களால் பட்டப்பகலில் வெட்டி கொலை https://t.co/gZUGE4qSlg #Rowdy #viji pic.twitter.com/k3zZlIsNds
— Oneindia Tamil (@thatsTamil) November 29, 2017
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மர்ம கும்பல் விஜியை விரட்டுவது வெட்டுவது மற்றும் வெட்டிவிட்டு தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications